கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியுள்ளது.


இந்தியாவில் புதிய வைரஸ் தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று புதிதாக 27 ஆயிரத்து 114 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.


இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸால் நாள்தோறும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளில் 519 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 22,123 ஆக உயர்ந்துள்ளது.


மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர், தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர், டெல்லியில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *