இந்தியாவில் புதிதாக 28,701 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 28 ஆயிரத்து 701 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 23 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.


மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 427 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து தமிழகத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 494 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


குஜராத்தில் 41,820, கர்நாடகாவில் 38,843, உத்தர பிரதேசத்தில் 36,476, தெலங்கானாவில் 34,671, மேற்குவங்கத்தில் 30,013, ஆந்திராவில் 29,168, ராஜஸ்தானில் 24,392, ஹரியாணாவில் 21,240 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது கவலையளிக்கிறது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *