எகிறும் கொரோனா.. இந்தியாவில் 97,570 பேர்.. தமிழகத்தில் 5,496 பேர்…

எகிறும் கொரோனா.. இந்தியாவில் 97,570 பேர்.. தமிழகத்தில் 5,496 பேர்… வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 97 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் அதிக வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வைரஸ் தொற்று உச்சத்தில் இருப்பதாக உலக சுகாதார துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 58 ஆயிரத்து 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,201 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 77 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 5,528 பேர் கண்ணாடி கூண்டில் இருக்கும் சுகாதார ஊழியர், நோயாளியின் சளி மாதிரியை எடுக்கிறார்.
கண்ணாடி கூண்டில் இருக்கும் சுகாதார ஊழியர், நோயாளியின் சளி மாதிரியை எடுக்கிறார்.

மகாராஷ்டிரா முதலிடம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 24 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 15 ஆயிரத்து 681 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 71 ஆயிரத்து 934 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 9 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 40 ஆயிரத்து 411 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 999 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 999 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 686 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 716 பேர் குணமடைந்துள்ளனர். 96 ஆயிரத்து 191 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

4-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் புதிதாக பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 45 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 442 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரத்து 321 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 4 லட்சத்து 97 ஆயிரத்து 66 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 649 பேர் குணமடைந்துள்ளனர். 47 ஆயிரத்து 110 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 76 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக அதிகபட்சமாக சென்னையில் 978 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 428 பேர், திருவள்ளூரில் 299 பேர், செங்கல்பட்டில் 267 பேர், திருப்பூரில் 256 பேர், கடலூரில் 253 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 2,885 பேருக்கு தொற்று

தெலங்கானாவில் 32,005 பேர், சத்தீஸ்கரில் 31,001 பேர், ஒடிசாவில் 30,450 பேர், அசாமில் 29,580 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 2 ஆயிர்தது 885 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 139 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 75 ஆயிரத்து 848 பேர் குணமடைந்துள்ளனர். 28 ஆயிரத்து 802 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *