10 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தம்

10 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அருகே ஆந்திராவின்  ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பிஎஸ்எல்வி சி49 ரக ராக்கெட் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்,  இஓஎஸ்-1 உட்பட 10 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்றது. குறிப்பிட்ட புவிவட்டப் பாதையில் 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

இஓஎஸ்-1 செயற்கைக்கோள் மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும். குறிப்பாக தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்களின் ஊடுருவலை கண்டறிய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இதே வகையை சேர்ந்த மேலும் 4 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *