மீண்டும் 90 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா

மீண்டும் 90 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் தொற்று.நாடு முழுவதும் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 43.7 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக புதிய வைரஸ் தொற்று 30 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இதேபோல தினசரி உயிரிழப்பும் 500-க்கும் கீழாக குறைந்திருக்கிறது.

தற்போதைய புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவில் 65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 25 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் 90 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் தொற்று. இதன்காரணமாக வணிக வளாகங்கள், அலுவலகங்களில் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு பெண்ணின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.
மீண்டும் 90 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் தொற்று. இதன்காரணமாக வணிக வளாகங்கள், அலுவலகங்களில் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு பெண்ணின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.

2-வது இடத்தில் இந்தியா

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா, 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இதேநிலை நீடித்தால் செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 65 லட்சத்தை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது. அதாவது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை எட்டி பிடிக்கும் என்று தெரிகிறது.

ஒரு காலத்தில் கொரோனா மையப்புள்ளியாக இருந்த ஐரோப்பிய நாடுகள் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன. அமெரிக்கா, பிரேசில் நாடுகளில்கூட புதிய வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

வைரஸின் பிறப்பிடமும் உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரே நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை நம்பிக்கை அளித்தாலும் புதிய தொற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒரே நாளில் 89,706 பேர்

கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் புதிய கொரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவானது. எனினும் நேற்று 80 ஆயிரத்துக்கும் கீழாக புதிய தொற்று குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் இன்று மீண்டும் 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 89 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மூதாட்டியிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மூதாட்டியிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதில் 33 லட்சத்து 98 ஆயிரத்து 845 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாடு முழுவதும் ஒரே நாளில் 1,115 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 73 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 20 ஆயிரத்து 131 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் அண்டை மாநிலமான ஆந்திரா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு நேற்று 10 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் கர்நாடகா 3-வது இடத்திலும் உத்தர பிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.
தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளனர். 50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *