இந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 26,567 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை 97,03,770 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 91,78,946 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,83,866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,40,958 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,075 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 76,852 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 998 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் நேற்று 316 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,626 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,92,788 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,70,378 பேர் குணமடைந்துள்ளனர். 10,588 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

சென்னையில் இன்று 333 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 

கேரளாவில் இன்று  5,032 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 59,732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 1,674 பேர், உத்தர பிரதேசத்தில் 1,453 பேர், மேற்குவங்கத்தில் 2,214 பேர், ஒடிசாவில் 368 பேர், ராஜஸ்தானில் 1,927 பேர், தெலங்கானாவில் 682 பேர், சத்தீஸ்கரில் 1,423 பேர், ஹரியாணாவில் 1,392 பேர், பிஹாரில் 542 பேர், குஜராத்தில் 1,380 பேர், மத்திய பிரதேசத்தில் 1,452 பேர், அசாமில் 166 பேர், பஞ்சாபில் 613 பேர், காஷ்மீரில் 280 பேர், ஜார்க்கண்டில் 179 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *