இந்தியாவில் 29,163 பேர்.. தமிழகத்தில் 1,652 பேருக்கு கொரோனா… தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 29,163 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களில் முதல்முறையாக தினசரி தொற்று 30,000-க்கும் கீழாக குறைந்திருக்கிறது.
இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88,74,290 ஆக உயர்ந்துள்ளது. இதில் 82,90,370 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 40,791 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனைகளில் 4,53,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,519 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2,535 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,49,777 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,18,380 பேர் குணமடைந்துள்ளனர். 85,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,034 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 1,157 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,62,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,25,141 பேர் குணமடைந்துள்ளனர். 26,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,541 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 753 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,54,764 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,29,991 பேர் குணமடைந்துள்ளனர். 17,892 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,881 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,61,568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,34,970 பேர் குணமடைந்துள்ளனர். 15,085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,513 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கேரளாவில் இன்று 5,792 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 5,33,500 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,61,394 பேர் குணமடைந்துள்ளனர். 70,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,915 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1,546 பேர், டெல்லியில் 3,797 பேர், மேற்குவங்கத்தில் 3,012 பேர், ஒடிசாவில் 749 பேர், தெலங்கானாவில் 952 பேர், ராஜஸ்தானில் 2,169 பேர், பிஹாரில் 516 பேர், சத்தீஸ்கரில் 1,110 பேர், அசாமில் 186 பேர், ஹரியாணாவில் 2,153 பேர், குஜராத்தில் 926 பேர், மத்திய பிரதேசத்தில் 597 பேர், பஞ்சாபில் 424 பேர், ஜார்க்கண்டில் 166 பேர், காஷ்மீரில் 390 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.