இந்தியாவில் 30,681 பேர்.. தமிழகத்தில் 1,725 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 30,681 பேர்.. தமிழகத்தில் 1,725 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அப்போது நாள்தோறும் 90,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வந்தது. கடந்த அக்டோபர், நடப்பு நவம்பரில் தினசரி தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் இன்று  30,548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களில் இதுவே குறைவான தினசரி தொற்றாகும். இதுவரை 88,45,127 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 82,49,579 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 43,851 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 93.27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 4,65,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,070 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2,544 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,47,242 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,15,379 பேர் குணமடைந்துள்ளநர். 85,889 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,974 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 1,565 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,61,647 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,22,953 பேர் குணமடைந்துள்ளனர். 27,165 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,529 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,056 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,54,011 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,28,484 பேர் குணமடைந்துல்ளனர். 18,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,868 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,725 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,59,919 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,32,656 பேர் குணமடைந்துள்ளனர். 15,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவில் 17 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் இன்று 2,710 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 5,27,708 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,54,774 பேர் குணமடைந்துள்ளனர். 70,925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,888 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில்1,401 பேர், டெல்லியில் 3,235 பேர், மேற்குவங்கத்தில்  3,053 பேர், ஒடிசாவில் 753 பேர், தெலங்கானாவில் 502 பேர், பிஹாரில் 306 பேர், ராஜஸ்தானில் 2,184 பேர், சத்தீஸ்கரில் 530 பேர், அசாமில் 93 பேர், ஹரியாணாவில் 1,957 பேர்,  குஜராத்தில் 1,070 பேர், மத்திய பிரதேசத்தில் 870 பேர், பஞ்சாபில் 1,053 பேர், ஜார்க்கண்டில் 129 பேர், காஷ்மீரில் 460 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *