இந்தியாவில் 36,011 பேர்.. தமிழகத்தில் 1,320 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 36,011 பேர்.. தமிழகத்தில் 1,320 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 36,011 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது. இதில் 91,00,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 4,03,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,40,182 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 4,922 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 83,931 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் நேற்று 1,325 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் நேற்று 630 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 7,90,240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 7,67,659 பேர் குணமடைந்துள்ளனர். 10,788 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் 16 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,793 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கேரளாவில் இன்று 4,777 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 60,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் 3,419 பேர், உத்தர பிரதேசத்தில் 1,833 பேர், மேற்குவங்கத்தில் 3,175 பேர், ஒடிசாவில் 409 பேர், ராஜஸ்தானில் 2,076 பேர், தெலங்கானாவில் 622 பேர், சத்தீஸ்கரில் 1,583 பேர், ஹரியாணாவில் 1,557 பேர், பிஹாரில் 546 பேர், குஜராத்தில் 1,514 பேர், அசாமில் 157 பேர், மத்திய பிரதேசத்தில் 1,352 பேர், பஞ்சாபில் 636 பேர், காஷ்மீரில் 501 பேர், ஜார்க்கண்டில் 196 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *