இந்தியாவில் 38,617 பேர்.. தமிழகத்தில் 1,714 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும்இன்று 38,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,12,907 ஆக அதிகரித்துள்ளது. இதில் 83,35,109 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,46,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,993 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2,732 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,52,509 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,23,503 பேர் குணமடைந்துள்ளனர். 82,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,102 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 1,336 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,64,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,27,241 பேர் குணமடைந்துள்ளனர். 25,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,557 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 1,395 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,56,159 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,32,284 பேர் குணமடைந்துள்ளனர். 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,890 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7,37,281 பேர் குணமடைந்துள்ளனர். 14,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,531 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 162 பேர், செங்கல்பட்டில் 129 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
கேரளாவில் இன்று 6,419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5,41,919 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,68,460 பேர் குணமடைந்துள்ளனர். 69,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,943 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1,420 பேர், டெல்லியில் 6,396 பேர், மேற்குவங்கத்தில் 3,654 பேர், ஒடிசாவில் 644 பேர், தெலங்கானாவில் 948 பேர், ராஜஸ்தானில் 2,194 பேர், பிஹாரில் 601 பேர், சத்தீஸ்கரில் 1,721 பேர், அசாமில் 242 பேர், ஹரியாணாவில் 2,450 பேர், குஜராத்தில் 1,125 பேர், மத்திய பிரதேசத்தில் 922 பேர், பஞ்சாபில் 515 பேர், ஜார்க்கண்டில் 261 பேர், காஷ்மீரில் 572 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.