இந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும்இன்று 38,772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 94,31,691 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 88,47,600 பேர் குணமடைந்துள்ளனர்.  மருத்துவமனைகளில் 4,46,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,37,139 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று  5,544 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 92,062 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் நேற்று 1,291 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் நேற்று  620 பேரிடம் வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,397 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,81,915 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,59,206 பேர் குணமடைந்துள்ளனர். 10,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,712 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கேரளாவில் இன்று  3,392 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தில் 61,894 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 4,906 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 35,091 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,066 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1,974 பேர், மேற்குவங்கத்தில் 3,367 பேர், ஒடிசாவில் 518 பேர், தெலங்கானாவில் 593 பேர், ராஜஸ்தானில் 2,581 பேர், சத்தீஸ்கரில் 1,273 பேர், பிஹாரில் 547 பேர், ஹரியாணாவில் 1,809 பேர், அசாமில் 134 பேர், குஜராத்தில் 1,564 பேர், மத்திய பிரதேசத்தில் 1,514 பேர், பஞ்சாபில் 733 பேர், காஷ்மீரில் 471 பேர், ஜார்க்கண்டில் 198 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *