இந்தியாவில் 43,082 பேர்.. தமிழகத்தில் 1,442 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 43,082 பேர்.. தமிழகத்தில் 1,442 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 43,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 93,09,787 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 87,18,517 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 4,55,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 492 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,35,715 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 6,406 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 87,014 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 46,813 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 1,505 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 25,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,726 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,031 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 12,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,970 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை  7,77,616 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,54,826 பேர் குணமடைந்துள்ளனர். 11,109 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,681 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 392 பேர்  

கேரளாவில் இன்று  3,966 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 5,87,707 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,21,522 பேர் குணமடைந்துள்ளனர். 2,171 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று 2,094 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 38,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,811 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2,094 பேர், மேற்குவங்கத்தில் 3,507 பேர், ஒடிசாவில் 644 பேர், தெலங்கானாவில் 761 பேர், ராஜஸ்தானில் 3,180 பேர், பிஹாரில் 696 பேர், சத்தீஸ்கரில் 1,753 பேர், ஹரியாணாவில் 2,122 பேர், அசாமில் 150 பேர், குஜராத்தில் 1,560 பேர், மத்திய பிரதேசத்தில் 1,668 பேர், பஞ்சாபில் 843 பேர், ஜார்க்கண்டில் 230 பேர், காஷ்மீரில் 487 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *