இந்தியாவில் 45,231 பேர்.. தமிழகத்தில் 2,481 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 45,231 பேர்.. தமிழகத்தில் 2,481 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 45,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,29,313 ஆக உயர்ந்துள்ளது. இதில் 75,44,798 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 53,285 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,61,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,22,607 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 5,369 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,83,775 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,14,079 பேர் குணமடைந்துள்ளனர். 1,25,672 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,024 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 3,652 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,27,064 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,65,261 பேர் குணமடைந்துள்ளனர். 50,611 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,192 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,618 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,25,966 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,95,592 பேர் குணமடைந்துள்ளனர். 23,668 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,706 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் இன்று 671 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 243 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 31 பேர் உயிரிழந்தனர். 

உத்தர பிரதேசத்தில் நேற்று 1,969 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,83,832 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,53,458 பேர் குணமடைந்துள்ளனர். 23,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,051 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 4,138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,44,268 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,55,943 பேர் குணமடைந்துள்ளனர். 86,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,533 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *