இந்தியாவில் 47,905 பேர்.. தமிழகத்தில் 2,112 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 47,905 பேர்.. தமிழகத்தில் 2,112 பேருக்கு கொரோனா…தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 47,905 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,83,916 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80,66,501 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 4,89,294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 550 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,28,121 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிராவில் நேற்று 4,907 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,31,833 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,97,255 பேர் குணமடைந்துள்ளனர். 89,018 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,560 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 2,582 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,53,796 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,11,581 பேர் குணமடைந்துள்ளனர். 30,762 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,453 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,732 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,47,977 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,20,234 பேர் குணமடைந்துள்ளனர். 20,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,828 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,52,521 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,22,686 பேர் குணமடைந்துள்ளனர்.  18,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,440 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 565 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 190 பேர், செங்கல்பட்டில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் நேற்று 1,848 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு இதுவரை 5,03,159 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,73,316 பேர் குணமடைந்துள்ளனர். 22,562 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 5,537 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 5,08,256 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,28,529 பேர் குணமடைந்துள்ளனர். 77,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,796 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று  8,593 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4,59,975 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,10,118 பேர் குணமடைந்துள்ளனர். 42,629 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,228 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் நேற்று 3,872 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,16,984 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3,76,696 பேர் குணமடைந்துள்ளனர். 32,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  7,452 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,220 பேர், தெலங்கானாவில் 1,015 பேர், பிஹாரில் 571 பேர், ராஜஸ்தானில் 2,080 பேர், அசாமில் 245 பேர், சத்தீஸ்கரில் 1,721 பேர், ஹரியாணாவில் 2,546 பேர், குஜராத்தில் 1,125 பேர், மத்திய பிரதேசத்தில் 883 பேர், பஞ்சாபில் 699 பேர், ஜார்க்கண்டில் 284 பேர், காஷ்மீரில் 507 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *