இந்தியாவில் 45,576 பேர்.. தமிழகத்தில் 1,707 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 45,576 பேர்.. தமிழகத்தில் 1,707 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 45,576 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89,58,483 ஆக அதிகரித்துள்ளது. இதில் 83,83,602 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 4,43,303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,31,578 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 5,011 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 17,57,520 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,30,111 பேர் குணமடைந்துள்ளனர். 81,207 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,202 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 1,791 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,65,931 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,29,188 பேர் குணமடைந்துள்ளனர். 25,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,579 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,236 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,57,395 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,33,980 பேர் குணமடைந்துள்ளனர். 16,516 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,899 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 7,64,989 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,39,532 பேர் குணமடைந்துள்ளனர்.  13,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 149 பேர், செங்கல்பட்டில் 119 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கேரளாவில் இன்று 5,722 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,47,641 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,75,320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68,229 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,969 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2,346 பேர், டெல்லியில் 7,486 பேர், மேற்குவங்கத்தில் 3,668 பேர், ஒடிசாவில் 868 பேர், தெலங்கானாவில் 1,058 பேர், ராஜஸ்தானில் 2,178 பேர், பிஹாரில் 804 பேர், சத்தீஸ்கரில் 2,048 பேர், அசாமில் 169 பேர், ஹரியாணாவில் 2,562 பேர், குஜராத்தில் 1,281 பேர், மத்திய பிரதேசத்தில் 1,209 பேர், பஞ்சாபில் 798 பேர், ஜார்க்கண்டில் 251 பேர், காஷ்மீரில் 574 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *