இந்தியாவில் 49,881 பேர்.. தமிழகத்தில் 2,652 பேருக்கு கொரோனா… தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 49,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,40,203 ஆக உயர்ந்துள்ளது. இதில் 73,15,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் 6,03,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 517 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,20,527 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 6,738 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,60,766 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,86,926 பேர் குணமடைந்துள்ளனர். 1,30,286 பேர் சிகிச்சையில் உள்ளனர். 43,554 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,949 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,14,774 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,81,509 பேர் குணமடைந்துள்ளனர். 26,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,643 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 3,146 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,12,784 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,33,558 பேர் குணமடைந்துள்ளனர். 68,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,046 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,19,403 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,83,464 பேர் குணமடைந்துள்ளனர். 24,886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 35 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,053 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,980 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,76,034 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,43,589 பேர் குணமடைந்துள்ளனர். 25,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,958 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 7,020 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 4,18,484 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3,25,166 பேர் குணமடைந்துள்ளனர். 91,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,429 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் புதிதாக 5,673 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,70,014 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 3,34,240 பேர் குணமடைந்துள்ளனர். 29,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,396 பேர் உயிரிழந்துள்ளனர்.