மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முவுவதும் ஒரே நாளில் 64 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 லட்சத்து 51 ஆயிரத்து 556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 லட்சத்து 61 ஆயிரத்து 595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 48 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 11 ஆயிரத்து 813 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 958 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 798 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 413 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 19 ஆயிரத்து 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 9,996 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2,64,142 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,70,924 பேர் குணமடைந்துள்ளனர். 90,840 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,378 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று ஆயிரத்து 706 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1.2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,613 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமாநிலங்களில் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.