அடங்காத கொரோனா..ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று..996 பேர் பலி

ஒரே நாளில் 65000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கொட்டம் அடக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தொடர்ந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி மட்டுமே 53 ஆயிரம் தொற்று பதிவானது.

திருவனந்தபுரத்தில் கரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்.
திருவனந்தபுரத்தில் கரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்.


இந்தியாவில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 லட்சத்து 8 ஆயிரத்து 37 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 49 ஆயிரத்து 36 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 12 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 734 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 8,943 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 2,70,190 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,77,808 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
மும்பையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

89,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,475 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 7 ஆயிரத்து 908 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்துல் 2 லட்சத்து 11 ஆயிரத்து 108 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் நேற்று 1,569 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 41,277 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,996 பேர் குணமடைந்துள்ளனர். 14,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1,40,775, மேற்குவங்கத்தில் 1,08,323, பிஹாரில் 94,193, தெலங்கானாவில் 88,396, குஜராத்தில் 75,408 பேர், அசாமில் 71,795, வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *