போதை பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்தது.
ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவது தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையின் போதைப் பொருள் மருந்துகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையத்தில் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதில் இந்தியா, அமெரிக்கா உட்பட 27 நாடுகள் போதை பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் எதிராக வாக்களித்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு காரணமாக சர்வதேச அளவில் கஞ்சா மீதான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.