இந்தியாவில் 75,083 பேர்.. தமிழகத்தில் 5,337 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 75,083 பேர்.. தமிழகத்தில் 5,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 75 ஆயிரத்து 83 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது. இதில் 44 லட்சத்து 97 ஆயிரத்து 897 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 468 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வந்த நிலையில் முதல்முறையாக குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,053 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 88 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 15 ஆயிரத்து 738 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 12 லட்சத்து 24 ஆயிரத்து 380 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 348 பேர் குணமடைந்தனர். 2 லட்சத்து 75 ஆயிரத்து 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 33 ஆயிரத்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 7 ஆயிரத்து 339 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 876 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்து 354 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6 ஆயிரத்து 235 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 749 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

இதில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ளனர். 74 ஆயிரத்து 518 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 4 ஆயிரத்து 618 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 3 லட்சத்து 58 ஆயிரத்து 893 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். 64 ஆயிரத்து 164 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 595 பேர், திருப்பூரில் 369 பேர், சேலத்தில் 291 பேர், கடலூரில் 233 பேர், செங்கல்பட்டில் 231 பேர், திருவள்ளூரில் 230 பேர், காஞ்சிபுரத்தில் 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 4,125 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 125 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 756 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து ஆயிரத்து 731 பேர் குணமடைந்துள்ளனர். 40 ஆயிரத்து 382 பேர் சிகிச்சையில் உள்ளனர். 572 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் 37,927 பேர், ஒடிசாவில் 34,033 பேர், டெல்லியில் 30,941 பேர், தெலங்கானாவில் 29,649 பேர், அசாமில் 29,609 பேர், மேற்குவங்கத்தில் 24,898 பேர், மத்திய பிரதேசத்தில் 22,542 பேர், காஷ்மீரில் 21,661 பேர், பஞ்சாபில் 21,661 பேர், ஹரியாணாவில் 21,014 பேர், ராஜஸ்தானில் 18,245 பேர், குஜராத்தில் 16,305 பேர், ஜார்க்கண்டில் 13,504 பேர், பிஹாரில் 12,539 பேர், உத்தராகண்டில் 12,075 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *