தமிழகத்தில் 5,528 பேர்.. இந்தியாவில் 95,735 பேர்…

கொரோனா.. இந்தியாவில் 95,735 பேர்.. தமிழகத்தில் 5,528 பேர்… ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 95 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 லட்சத்து 65 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 34 லட்சத்து 71 ஆயிரத்து 783 பேர் குணமடைந்துள்ளனர். 9 ஆயிரத்து 19 ஆயிரத்து 18 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,172 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 75 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 23,577 பேர்

மகாராஷ்டிராவில் புதிதாக 23 ஆயிரத்து 577 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 9 லட்சத்து 67 ஆயிரத்து 349 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5,528 பேர் கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

இதில் 6 லட்சத்து 86 ஆயிரத்து 462 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். 27 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 9 ஆயிரத்து 540 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 21 ஆயிரத்து 730 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 433 பேர் குணமடைந்துள்ளனர். 99 ஆயிரத்து 489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் 10,418 பேர்

ஆந்திராவில் புதிதாக 10 ஆயிரத்து 418 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 512 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். 97 ஆயிரத்து 271 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 5,528 பேர் கண்ணாடி கூண்டில் இருக்கும் சுகாதார ஊழியர், நோயாளியின் சளி மாதிரியை எடுக்கிறார்.
கண்ணாடி கூண்டில் இருக்கும் சுகாதார ஊழியர், நோயாளியின் சளி மாதிரியை எடுக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் 64 ஆயிரத்து 28 பேர், தெலங்கானாவில் 32 ஆயிரத்து 106 பேர், ஒடிசாவில் 29 ஆயிரத்து 255 பேர், அசாமில் 29 ஆயிரத்து 166 பேர், சத்தீஸ்கரில் 28 ஆயிரத்து 041 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 3 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 99 ஆயிரத்து 266 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 72 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளனர். 26 ஆயிரத்து 229 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 396 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 5,528 பேர்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். 48 ஆயிரத்து 482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் இன்று 64 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டவாரியாக சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.கோவையில் 440 பேர், சேலத்தில் 300 பேர், திருவள்ளூரில் 296 பேர், செங்கல்பட்டில் 279 பேர், கடலூரில் 263 பேர், விழுப்புரத்தில் 189 பேர், காஞ்சிபுரத்தில் 173 பேர், வேலூரில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *