நாடு முழுவதும் புதிதாக 57,981 பேருக்கும் தமிழகத்தில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 787 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 860 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 121 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,182 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் 489, கோவை 392, செங்கல்பட்டு 344, தேனி 295, கடலூர் 250, காஞ்சிபுரத்தில் 249 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 55,079 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 27,02,742 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,77,779 பேர் குணமடைந்துள்ளனர். 6,73,166 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 876 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 51,797ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 8,493 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,04,358 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் இன்று 9,652 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 2,18,311 பேர் குணமடைந்துள்ளனர். 85,130 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,820 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 6,317 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 2,33,283 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,48,562 பேர் குணமடைந்துள்ளனர். 80,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 1,758 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 47,898 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,394 பேர் குணமடைந்துள்ளனர். 16,274 பேர் சிகிச்சையில் உள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ,53,367 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,38,301 பேர் குணமடைந்துள்ளனர். 10,852 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,214 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1,58,216, மேற்குவங்கத்தில் 1,19,578, பிஹாரில் 1,06,307, தெலங்கானாவில் 93,937, குஜராத்தில் 79,710 , அசாமில் 79,667 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.