இந்தியாவில் 94,372 பேர்.. தமிழகத்தில் 5,693 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 94,372 பேர்.. தமிழகத்தில் 5,693 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 94 ஆயிரத்து 372 பேர் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 47 லட்சத்து 54 ஆயிரத்து 356 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 லட்சத்து 2 ஆயிரத்து 595 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,114 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 78 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 5,528 பேர் கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று 22 ஆயிரத்து 84 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 765 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரத்து 138 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29 ஆயிரத்து 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 9 ஆயிரத்து 140 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 49 ஆயிரத்து 551 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 556 பேர் குணமடைந்துள்ளனர். 97 ஆயிரத்து 834 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 901 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 587 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக முதியரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக முதியரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இதில் 4 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்து 733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 6 ஆயிரத்து 786 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 831 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 527 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரத்து 955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 5,693 பேர்

5-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் குணமடைந்துள்ளனர். 47 ஆயிரத்து 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 994 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் ஒரு பெண்ணின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் ஒரு பெண்ணின் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

கோவையில் 490 பேர், திருவள்ளூரில் 300 பேர், செங்கல்பட்டில் 299 பேர், திருப்பூரில் 291 பேர், கடலூரில் 251 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கேரளாவில் 3,139 பேர்

சத்தீஸ்கரில் 33,246 பேர், தெலங்கானாவில் 31,607 பேர், ஒடிசாவில் 30,999 பேர், அசாமில் 29,133 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 3 ஆயிரத்து 139 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 278 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 77 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளனர். 30 ஆயிரத்து 72 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 28,059 பேர், மேற்குவங்கத்தில் 23,521 பேர், மத்திய பிரதேசத்தில் 19,840 பேர், ஹரியாணாவில் 19,446 பேர், பஞ்சாபில் 19,384 பேர், ராஜஸ்தானில் 16,582 பேர், குஜராத்தில் 16,301 பேர், காஷ்மீரில் 16,261 பேர், ஜார்க்கண்டில் 14,844 பேர், பிஹாரில் 14,396 பேர், உத்தராகண்டில் 9,781 பேர், திரிபுராவில் 7,584 பேர், கோவாவில் 5,323 பேர், இமாச்சல பிரதேசத்தில் 3,194 பேர், சண்டிகரில் 2,586 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 1,712 பேர், மணிப்பூரில் 1,584 பேர், மேகாலயாவில் 1,570 பேர், நாகாலாந்தில் 1,215 பேர், லடாக்கில் 841 பேர், மிசோரமில் 591 பேர், சிக்கிமில் 541 பேர், டையூ-டாமனில் 279 பேர், அந்தமானில் 268 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *