இந்தியாவில் 69,921 பேர்.. தமிழகத்தில் 5,928 பேர் …

எகிறும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் 5,928.. இந்தியாவில் 69,921 பேர்…வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர். 52 ஆயிரத்து 379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 7 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,084 பேர்

மாவட்டவாரியாக சென்னையில் 1,084 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 581 பேர், செங்கல்பட்டில் 384 பேர், சேலத்தில் 335 பேர், திருவள்ளூரில் 296 பேர், கடலூரில் 286 பேர்,
கள்ளக்குறிச்சியில் 209 பேர், காஞ்சிபுரத்தில் 191 பேர், ராணிபேட்டையில் 182 பேர், விழுப்புரத்தில் 166 பேர், திருவண்ணாமலையில் 154 பேர், கன்னியாகுமரியில் 153 பேர், திருநெல்வேலியில் 152 பேர், வேலூரில் 137 பேர், தஞ்சாவூரில் 132 பேர், மதுரையில் 128 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இன்று 69,921 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.கொரோனா பரிசோதனை முகாமில் ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று 69,921 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.கொரோனா பரிசோதனை முகாமில் ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

இந்தியாவில் 69,921 பேர்

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 36,91,166 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,39,882 பேர் குணமடைந்துள்ளனர். 7,85,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 819 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 65,288 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 5.73 லட்சம் பேர்

மகாராஷ்டிராவில் புதிதாக 11,852 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,92,541 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,73,559 பேர் குணமடைந்துள்ளனர். 1,94,399 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 24,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 10,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு 4,34,771 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3,30,526 பேர் குணமடைந்தனர். 1,00,276 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,969 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 7,238 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,42,423 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,49,467 பேர் குணமடைந்துள்ளனர். 87,254 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 54,788 பேர், தெலங்கானாவில் 31,699 பேர், ஒடிசாவில் 25,758 பேர், மேற்குவங்கத்தில் 25,280 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

கேரளாவில் தொற்று குறைந்தது

கேரளாவில் வைரஸ் தொற்று குறைந்துள்ளது. அங்கு நேற்று 1,140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 76,525 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 53,653 பேர் குணமடைந்துள்ளனர். 22,512 பேர் சிகிச்சையில் உள்ளனர். 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் 23,273 பேர், பிஹாரில் 16,445 பேர், குஜராத்தில் 15,524 பேர், பஞ்சாபில் 15,512 பேர், டெல்லியில் 14,626 பேர், சத்தீஸ்கரில் 14,237 பேர், ஜார்க்கண்டில் 14,096 பேர், மத்திய பிரதேசத்தில் 13,914 பேர், ராஜஸ்தானில் 13,825 பேர், ஹரியாணாவில் 11,371 பேர், ஜம்மு-காஷ்மீரில் 7,980 பேர், உத்தராகண்டில் 5,908 பேர், திரிபுராவில் 4,366 பேர்,
கோவாவில் 3,649 பேர், மணிப்பூரில் 1,894 பேர், சண்டிகரில் 1,859 பேர், இமாச்சல பிரதேசத்தில் 1,563 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 1,220 பேர், மேகாலயாவில் 1,196 பேர், நாகாலாந்தில் 874 பேர், லடாக்கில் 773 பேர், அந்தமானில் 439 பேர், சிக்கிமில் 424 பேர், மிசோரமில் 420 பேர், டையூ-டாமனில் 284 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *