நாடு முழுவதும் 88,600 பேர்.. தமிழகத்தில் 5,791 பேருக்கு கொரோனா…

நாடு முழுவதும் 88,600 பேர்.. தமிழகத்தில் 5,791 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 88 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சத்து 92 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 லட்சத்து 41 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 56 ஆயிரத்து 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,124 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 94 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 20 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 176 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 450 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 69 ஆயிரத்து 535 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 430 பேர் உயிரிழந்தனர். இதுவரை 35 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 811 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 66 ஆயிரத்து 023 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 719 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 801 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் ஆந்திரா

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 7 ஆயிரத்து 293 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 751 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 294 பேர் குணமடைந்துள்ளனர். 65 ஆயிரத்து 794 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 663 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் நேற்று 4 ஆயிரத்து 302 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3 லட்சத்து 82 ஆயிரத்து 835 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 232 பேர் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 86 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 517 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

5-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 445 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 384 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 921 பேர் குணமடைந்துள்ளனர்.

56 ஆயிரத்து 709 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 677 பேர் உயிரிழந்துள்ளனர்.

6-வது இடத்தில் தமிழகம்

6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் குணமடைந்துள்ளனர். 46,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 80 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக சென்னையில் வைரஸ் தொற்று உயர்ந்து வருவதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவையில் 596 பேர், செங்கல்பட்டில் 296 பேர், கடலூரில் 256 பேர், திருவள்ளூரில் 202 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் 34,476 பேர், சத்தீஸ்கரில் 30,689 பேர், தெலங்கானாவில் 30,234 பேர், அசாமில் 30,162 பேர், டெல்லியில் 29,717 பேர், மேற்குவங்கத்தில் 25,544 பேர், மத்திய பிரதேசத்தில் 22,228 பேர், பஞ்சாபில் 19,483 பேர்,

ராஜஸ்தானில் 19,335 பேர், காஷ்மீரில் 18,430 பேர், ஹரியாணாவில் 17,149 பேர், குஜராத்தில் 16,463 பேர், பிஹாரில் 12,754 பேர், ஜார்க்கண்டில் 12,426 பேர், உத்தராகண்டில் 10,856 பேர் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *