இந்தியாவில் 55,722 பேர்.. தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 55,722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 75,50,273 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 66,63,608 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 7,72,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழாக உள்ளது.
ஒரே நாளில் 579 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,14,610 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக கரோனா உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்திருக்கிறது.
வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 9,060 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 15,95,381 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,69,810 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,456 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,155 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 3,986 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 7,83,132 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,40,229 பேர் குணமடைந்துள்ளனர். 36,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 7,012 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,65,586 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,45,825 பேர் குணமடைந்துள்ளனர். 1,09,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,478 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,42,152 பேர் குணமடைந்துள்ளனர். 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 49 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,691 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,486 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 4,55,146 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,15,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,658 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 5,022 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,46,881 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,52,868 பேர் குணமடைந்துள்ளனர். 92,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,182 பேர் உயிரிழந்துள்ளனர்.