கொரோனா.. இந்தியாவில் 83 ஆயிரம் பேர்.. தமிழகத்தில் 6 ஆயிரம் பேர்…

கொரோனா.. வைரஸ் தொற்றால்.. இந்தியாவில் 83 ஆயிரம் பேர்.. தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக இன்றும் புதிய தொற்று 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 லட்சத்து 37 ஆயிரத்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் 8 லட்சத்து 31 பேர் 124 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 1,096 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 68 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 18 ஆயிரத்து 105 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 43 ஆயிரத்து 844 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 லட்சத்து 5 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 391 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் புதிதாக 10 ஆயிரத்து 199 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 730 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 521 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 8 ஆயிரத்து 865 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 35 பேர் குணமடைந்துள்ளனர்.96 ஆயிரத்து 117 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயாளி ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
நோயாளி ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் 57 ஆயிரத்து 598 பேர், தெலங்கானாவில் 32 ஆயிரத்து 994 பேர், அசாமில் 27 ஆயிரத்து 303 பேர், ஒடிசாவில் 25 ஆயிரத்து 538 பேர், மேற்குவங்கத்தில் 24 ஆயிரத்து 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 60 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளனர். 21 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 5,976 பேர்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். 51 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 7 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக சென்னையில் இன்று 992 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 595 பேர், கடலூரில் 499 பேர், செங்கல்பட்டில் 370 பேர், திருவள்ளூரில் 260 பேர், சேலத்தில் 239 பேர், திருவண்ணாமலையில் 216 பேர், தஞ்சாவூரில் 164 பேர், காஞ்சிபுரத்தில் 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *