இந்தியாவில் 86,821 பேர்.. தமிழகத்தில் 5,688 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 86,821 பேர்.. தமிழகத்தில் 5,688 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 86,821 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 லட்சத்து 73 ஆயிரத்து 201 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,181 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 98 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 18 ஆயிரத்து 317 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 13 லட்சத்து 84 ஆயிரத்து 446 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 59 ஆயிரத்து 462 பேர் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 856 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து ஆயிரத்து 767 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 268 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 635 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 864 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் கேரளா

3-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 8 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 241 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 52 பேர் குணமடைந்துள்ளனர். 72 ஆயிரத்து 339 பேர் சிகிச்சையில் உள்ளனர். 771 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6 ஆயிரத்து 133 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 6,93,484 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 29 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். 58 ஆயிரத்து 445 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 50 ஆயிரத்து 883 பேர் கொரோனா வைரஸுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதன்மூலம் மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,289 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 550 பேர்,செங்கல்பட்டில் 356 பேர், திருவள்ளூரில் 260 பேர், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அசாமில் 34,496 பேர், ஒடிசாவில் 32,577 பேர், சத்தீஸ்கரில் 30,927 பேர், தெலங்கானாவில் 29,058 பேர், டெல்லியில் 26,332 பேர், மேற்குவங்கத்தில் 26,332 பேர், மத்திய பிரதேசத்தில் 20,997 பேர், ராஜஸ்தானில் 20,581 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *