இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அசுர வேகமெடுத்து பாய்கிறது. கடந்த வாரம் 50 ஆயிரமாக இருந்த புதிய தொற்று கடந்த சில நாட்களாக 60 ஆயிரத்தை தாண்டி வந்தது. இன்றைய தினம் 67 ஆயிரத்தை தொட்டு அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 23 லட்சத்து 96 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 லட்சத்து 53 ஆயிரத்து 622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் ஒரே நாளில் 942 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது
மகாராஷ்டிராவில் புதிதாக 12 ஆயிரத்து 712 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 48 ஆயிரத்து 313 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் இதுவரை 18 ஆயிரத்து 650 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 597 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 146 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளனர். 90 ஆயிரத்து 425 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 ஆயிரத்து 296 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 7 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 62 ஆயிரத்து 929 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 1,47,291 பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,32,384 பேர் குணமடைந்துள்ளனர். 10,868 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.