6.48 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியா முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 364 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 4,687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 79 ஆயிரம் 927 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 8,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் டெல்லி


மகாராஷ்டிராவை தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில் 94 ஆயிரத்து 695 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 2 ஆயிரத்து 923 பேர் உயிரிழந்துள்ளனர்.


குஜராத்தில் 34,600, உத்தர பிரதேசத்தில் 25,797 , மேற்குவங்கத்தில் 20,488, ராஜஸ்தானில் 19,052, ஹரியாணாவில் 16,003, மத்திய பிரதேசத்தில் 14.297, பிஹாரில் 10,954, அசாமில் 9,673, ஒடிசாவில் 8,106, காஷ்மீரில் 8,016, பஞ்சாபில் 5,937 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 5,204 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,048 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 22,771 பேர்


“நாடு முழுவதும் ஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது” மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *