இந்தியாவில் 36,652 பேர்.. தமிழகத்தில் 1,366 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 36,652 பேர்.. தமிழகத்தில் 1,366 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 36,652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,08,211 ஆக அதிகரித்துள்ளது. இதில் 90,58,822 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,09,689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,39,700 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 84,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் நேற்று 1,247 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 25,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆந்திராவில் நேற்று 599 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,422 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் இன்று 5,848 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 61,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 4,067 பேர், உத்தர பிரதேசத்தில் 1,951 பேர், மேற்கு வங்கத்தில் 3,206 பேர், ஒடிசாவில் 377 பேர், ராஜஸ்தானில் 1,934 பேர், தெலங்கானாவில் 596 பேர், சத்தீஸ்கரில் 1,579 பேர், ஹரியாணாவில் 1,602 பேர், பிஹாரில் 586 பேர், குஜராத்தில் 1,510 பேர், அசாமில் 169 பேர், மத்திய பிரதேசத்தில் 1,324 பேர், பஞ்சாபில் 724 பேர், காஷ்மீரில் 544 பேர், ஜார்க்கண்டில் 219 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *