இந்தியாவில் 37,975 பேர்.. தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 37,975 பேர்.. தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 37,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 91,77,840 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86,04,955 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 4,38,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,34,218 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 4,153 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 82,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46.653 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகாவில் நேற்று 1,509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,678 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 545 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 13,394 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,948 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 469 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 11,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் இன்று 5,420 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 64,412 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 2,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 4,454 பேர், உத்தர பிரதேசத்தில் 2,053 பேர், மேற்குவங்கத்தில் 3,557 பேர், ஒடிசாவில் 668 பேர், தெலங்கானாவில் 921 பேர், ராஜஸ்தானில் 3,232 பேர், பிஹாரில் 550 பேர், சத்தீஸ்கரில் 2,061 பேர், ஹரியாணாவில் 2,663 பேர், அசாமில் 169 பேர், குஜராத்தில் 1,487 பேர், மத்திய பிரதேசத்தில் 1,701 பேர், பஞ்சாபில் 711 பேர், ஜார்க்கண்டில் 219 பேர், காஷ்மீரில் 351 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *