இந்தியாவில் 41,322 பேர்.. தமிழகத்தில் 1,430 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 41,322 பேர்.. தமிழகத்தில் 1,430 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 41,322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 93,51,109 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 87,59,969 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 485 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,36,200 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 6,185 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 89,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கர்நாடகாவில் நேற்று  1,526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 25,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் புதிதாக 733 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 12,137 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 11,109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 13 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 393 பேர், கோவையில் 142 பேர், திருவள்ளூரில் 80 பேர், செங்கல்பட்டில் 78 பேர்,  காஞ்சிபுரத்தில் 70 பேர், சேலத்தில் 67 பேர், திருப்பூரில் 65 பேர், நாமக்கல்லில் 38 பேர், வேலூரில் 34 பேர், நாகப்பட்டினத்தில் 31 பேர், தஞ்சாவூரில் 31 பேர், மதுரையில் 29 பேர், கன்னியாகுமரியில் 29 பேர், தூத்துக்குடியில் 19 பேர், திருநெல்வேலியில் 15 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.   

கேரளாவில் இன்று 6,250 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 64,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டெல்லியில் நேற்று 5,482 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 38,181 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் 2,298 பேர், மேற்குவங்கத்தில் 3,489 பேர், ஒடிசாவில் 594 பேர், தெலங்கானாவில் 753 பேர், ராஜஸ்தானில் 3,093 பேர், பிஹாரில் 681 பேர், சத்தீஸ்கரில் 1,879 பேர், ஹரியாணாவில் 2,135 பேர், அசாமில் 149 பேர், குஜராத்தில் 1,607 பேர், மத்திய பிரதேசத்தில் 1,645 பேர், பஞ்சாபில் 808 பேர், காஷ்மீரில் 565 பேர், ஜார்க்கண்டில் 189 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *