இந்தியாவில் 41,810… தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 41,810… தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா… தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 41,810 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,92,919 ஆக உயர்ந்துள்ளது. இதில் 88,02,267 பேர் குணமடைந்துள்ளனர். 4,53,956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,36,696 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,965 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 90,965 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுரை 46,986 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 1,522 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  அங்கு 24,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,750 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 625 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 11,571 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,981 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,80,505 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,57,750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,052 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கேரளாவில் இன்று 5,643 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 64,589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,223 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று 4,998 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 36,578 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,998 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2,152 பேர், மேற்குவங்கத்தில் 3,459 பேர், ஒடிசாவில் 550 பேர், தெலங்கானாவில் 805 பேர், ராஜஸ்தானில் 2,765 பேர், சத்தீஸ்கரில் 1,890 பேர், பிஹாரில் 656 பேர், ஹரியாணாவில் 1,967 பேர், அசாமில் 163 பேர், குஜராத்தில் 1,598 பேர், மத்திய பிரதேசத்தில் 1,634 பேர், பஞ்சாபில் 719 பேர், காஷ்மீரில் 512 பேர், ஜார்க்கண்டில் 209 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *