இந்தியாவில் 44,059 பேர்.. தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 44,059  பேர்.. தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 44 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91 லட்சத்து 39 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது. இதில் 85 லட்சத்து 62 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று  5 ஆயிரத்து 753 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 82 ஆயிரத்து 521 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 46 ஆயிரத்து 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 1,704 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,121 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 14 ஆயிரத்து 249 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 938 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் தற்போது 12 ஆயிரத்து 245 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிவப்பு 11 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 483 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 757 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 64,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,071 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் டெல்லி 7-வது இடத்தில் இருந்தது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக டெல்லி நேற்று 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

டெல்லியில் புதிதாக 6,746 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 40,212 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,391 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 2,557 பேர், மேற்குவங்கத்தில் 3,591 பேர், ஒடிசாவில் 638 பேர், தெலங்கானாவில் 602 பேர், ராஜஸ்தானில் 3,260 பேர், பிஹாரில் 367 பேர், சத்தீஸ்கரில் 1,748 பேர், ஹரியாணாவில் 2,279 பேர், அசாமில் 86 பேர், குஜராத்தில் 1,595 பேர், மத்திய பிரதேசத்தில் 1,798 பேர், பஞ்சாபில் 679 பேர், ஜார்க்கண்டில் 137 பேர், காஷ்மீரில் 564 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *