இந்தியாவில் 45,674 பேர்.. தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 45,674 பேர்.. தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 45,674 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,07,754 ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளில் 5,12,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 559 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,26,121 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 3,959 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,14,273 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,69,090 பேர் குணமடைந்துள்ளனர். 1,00,068 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 2,258 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,44,147 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,99,439 பேர் குணமடைந்துள்ளனர். 33,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,369 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,367 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,40,730 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,12,517 பேர் குணமடைந்துள்ளனர். 21,434 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,779 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,334 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,43,822 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,13,584 பேர் குணமடைந்துள்ளனர். 18,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று உயிரிழப்பு மிகவும் குறைந்துள்ளது. இன்று 20 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,344 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 601 பேர், கோவையில் 205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,894 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.  அங்கு 4,95,421 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,65,250 பேர் குணமடைந்துள்ளனர். 22,991 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

6-வது இடத்தில் உள்ள கேரளாவில் நேற்று 5,440 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,86,109 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,02,477 பேர் குணமடைந்துள்ளனர். 83,261 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,692 பேர் உயிரிழந்துள்ளனர்.

7-வது இடத்தில் உள்ள டெல்லியில் புதிதாக 6,953 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,30,784 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,83,614 பேர் குணமடைந்துள்ளனர். 40,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,912 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *