இந்தியாவில் 46,232 பேர்.. தமிழகத்தில் 1,663 பேருக்கு கொரோனா…

நாடு முழுவதும் இன்று 46,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 90,50,597 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84,78,124 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 49,715 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனைகளில் 4,39,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,32,726 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,640 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் தற்போது 79,268 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,781 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் புதிதாக 1,221 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15,382 ஆக குறைந்திருக்கிறது. 

தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் தற்போது 12,919 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 18 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 486 பேர், கோவையில் 148 பேர், செங்கல்பட்டில் 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 5,772 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 66,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 உத்தர பிரதேசத்தில் 2,840 பேர், டெல்லியில் 6,608 பேர், மேற்குவங்கத்தில் 3,626 பேர், ஒடிசாவில் 757 பேர், தெலங்கானாவில் 925 பேர், ராஜஸ்தானில் 2,762 பேர், பிஹாரில் 375 பேர், சத்தீஸ்கரில் 1,842 பேர், ஹரியாணாவில் 3,104 பேர், அசாமில் 164 பேர், குஜராத்தில் 1,420 பேர், மத்திய பிரதேசத்தில் 1,528 பேர், பஞ்சாபில் 818 பேர், ஜார்க்கண்டில் 185 பேர், காஷ்மீரில் 661 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *