இந்தியாவில் 48,268 பேர்.. தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 48,268 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,37,119 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 74,32,829 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 59,454 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 5,82,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,737 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 6,190 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,72,858 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,03,050 பேர் குணமடைந்துள்ளனர். 1,25,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். 43,837 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 8,20,565 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,88,375 பேர் குணமடைந்துள்ளனர். 25,514 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,676 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 3,589 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,20,398 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,49,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 59,518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,140 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.24 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 6.91 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,122 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 690 பேர், கோவையில் 241 பேர், செங்கல்பட்டில் 148 பேர், திருவள்ளூரில் 133 பேர், திருப்பூரில் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,197 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,80,082 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,48,644 பேர் குணமடைந்துள்ளனர். 24,431 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,007 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் இன்று 7,983 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,33,105 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,40,324 பேர் குணமடைந்துள்ளனர். 91,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,484 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவுக்கு அடுத்து டெல்லியிலும் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அங்கு நேற்று 5,891 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 3,81,644 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,42,811 பேர் குணமடைந்துள்ளனர். 32,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,470 பேர் உயிரிழந்துள்ளனர்.