இந்தியாவில் 48,648 பேர்.. தமிழகத்தில் 2,608 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 48,648 பேர்.. தமிழகத்தில் 2,608 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும்இன்று 48,648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 73,73,375 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 5,94,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5.95 லட்சமாக இருந்தது. கடந்த 85 நாட்களில் முதல்முறையாக நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஒரே நாளில்  563 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 5,902 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,66,668 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,94,809 பேர் குணமடைந்துள்ளனர். 1,28,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். 43,710 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,905 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,17,679 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,84,752 பேர் குணமடைந்துள்ளனர். 26,268 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,659 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 4,025 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,16,809 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,41,219 பேர் குணமடைந்துள்ளனர். 64,499 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,22,011 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர். 23,532 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 38 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,091 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 723 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 228 பேர், செங்கல்பட்டில் 158 பேர், திருவள்ளூரில் 149 பேர், திருப்பூரில் 145 பேர், ஈரோட்டில் 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நேற்று 1,861 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,77,895 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,46,054 பேர் குணமடைந்துள்ளனர். 24,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,983 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 6,638 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,25,122 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3,32,994 பேர் குணமடைந்துள்ளனர். 90,565 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,457 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று 5,739 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,75,753 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,38,378 பேர் குணமடைந்துள்ளனர். 30,952 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,423 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *