மீண்டும் அரை லட்சம் பேருக்கு கொரோனா…

மீண்டும் அரை லட்சம் பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 50,210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 83,64,086 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,11,809 பேர் குணமடைந்துள்ளனர். 

மருத்துவமனைகளில் 5,27,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 704 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,24,315 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 5,505 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,98,198 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15,40,005 பேர் குணமடைந்துள்ளனர். 1,13,645 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,548 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 3,377 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,35,773 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,88,780 பேர் குணமடைந்துள்ளனர். 35,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,477 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் 8,33,208 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,05,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21,438 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,744 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,36,777 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,06,444 பேர் குணமடைந்துள்ளனர். 19,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11,272 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 2,167 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,89,502 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,59,722 பேர் குணமடைந்துள்ளனர். 22,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,104 பேர் உயிரிழந்துள்ளனர்.

6-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 6,820 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 4,66,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,80,650 பேர் குணமடைந்துள்ளனர். 84,087 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,613 பேர் உயிரிழந்துள்ளனர்.

7-வது இடத்தில் உள்ள டெல்லியில் நேற்று 6,842 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,09,938 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,65,866 பேர் குணமடைந்துள்ளனர். 37,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,703 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் புதிதாக 3,987 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,89,576 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 3,46,262 பேர் குணம் பெற்றுள்ளனர். 36,246 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 7,068 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *