நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சில நூறுகளாக இருந்த வைரஸ் தொற்று இப்போது 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேரும், டெல்லியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.