இந்தியர் வீட்டில்.. 500 கோடி ரூபாய் சிக்கியது…

ஐரோப்பாவின் நெதர்லாந்தை சேர்ந்த கேபிஎன் என்ற நிறுவனம் என்கிரோசாட் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம்.

ஜெய் படேலின் பாஸ்போர்ட்
ஜெய் படேலின் பாஸ்போர்ட்

கடந்த 2018-ம் ஆண்டு ஸ்பெயின் நிறுவனம் விற்பனை செய்த ‘பி.கியூ அகுவாரிஸ் எக்ஸ்2’ என் ஆண்டிராய்ட் போன்களில், என்கிரோசாட் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்து ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்களின் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க உளவுத் துறையால்கூட கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறார்கள். இவ்வகை என்கிரோசாட் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி ஐரோப்பாவில் மிகப்பெரிய நிழல் உலக தாதா கும்பல் செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெய் படேல் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.
ஜெய் படேல் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.

இந்த கும்பலின் மூளையாக (மாஸ்டர் மைண்டாக) செயல்பட்ட இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்த ஜெய் படேல் (வயது 20) என்ற இளைஞர் போலீஸில் சிக்கியுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த அவனது வீட்டில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக புகுந்து கைது செய்தனர்.

அப்போது ஜெய் படேலின் வீட்டில் இருந்து கத்தை, கத்தையாக கரன்ஸி நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பணம் அவரது மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை பிடிபடுவது ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட என்கிரோசாட் ஸ்மார்ட்போன்கள்
பறிமுதல் செய்யப்பட்ட என்கிரோசாட் ஸ்மார்ட்போன்கள்

மேலும் ஜெய் படேலின் வீட்டில் இருந்த இரண்டு டன்னுக்கும் அதிகமான கோகைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதிநவீன துப்பாக்கிகள், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிழல் உலக கும்பலை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி உள்ளனர். இதுவரை 746 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் யுரோபோல் போலீஸாரும் பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்.
மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்.

மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட இந்திய இளைஞர் ஜெய் படேலின் பின்னணியில் பெரும் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

ஐரோப்பா முழுவதும் என்கிரோசாட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை விற்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது. பலர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

என்கிரோசாட் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மிகப்பெரிய கிரிமினல் நெட்வொர்ட் வலை பின்னப்பட்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொலை, கொள்ளை, போதை, பெண்களை கடத்துவது, ஆயுத கடத்தல் என அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் மேலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கக்கூடும் என்று தெரிகிறது.

ஜெய் படேல் வீட்டில் கைப்பற்றப்பட்ட தானியங்கி துப்பாக்கி.
ஜெய் படேல் வீட்டில் கைப்பற்றப்பட்ட தானியங்கி துப்பாக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *