ராணுவ வீரர்கள் பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட 89 சமூகவலைதளங்கள், செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக சைபர் போரில் ஈடுபட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் இந்திய வீரர்களை கவர்த்திழுந்து ராணுவ ரகசியங்களை திருட இரு நாடுகளும் தொடர்ந்து சதி செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், சாங்ஸ்.பி.கே., வீசாட், ஹைக், டிக்டாக், லைக்கி, ஷேரிட், டிரூ காலர், பப்ஜி, டிண்டர், சமோசா, கவாலி, யுசி புரோசர், யுசி புரோசர் மினி, ஜும் என 89 சமூக வலைதளங்கள், செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.