இந்திய ஸ்பைடர் மேன்…

இந்திய ஸ்பைடர் மேன் ஆக 7 வயது சிறுவன் வெறுங் கால்களால் சுவரில் அசத்துகிறான்.

உத்தர பிரதேசம் கான்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன் யாஷ்ரத் சிங். அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார்.

சிறுவயது முதல் ஹாலிவுட்டின் ஸ்பைடர் மேன் திரைப்படங்களை அதிகமாக ரதித்து வந்துள்ளார்.

ஸ்பைடர் மேன் போன்று ஆக வேண்டும் என்ற ஆசையில் வெறுங்கால்களால் சுவரில் ஏறத் தொடங்கிய யாஷ்ரத் சிங், தொடர் பயிற்சியின் காரணமாக இந்தியாவின் ஸ்பைடர் மேனாக மாறிவிட்டார்.

ஏழு வயதாகும் அவர் வீட்டு சுவரில் விறுவிறு வென்று வெறுங்கால்களால் ஏறுகிறார். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவது இல்லை.

இதுகுறித்து சிறுவன் யாஷ்ரத் சிங் கூறும்போது, “தொடக்கத்தில் சுவரில் ஏற முயற்சிக்கும்போது கீழே விழுந்திருக்கிறேன். தொடர் முயற்சிகளால் இப்போது சுவரில் சுலபமாக ஏறுகிறேன்.

நான் சுவரில் ஏறுவதை வீட்டில் யாரும் விரும்பவில்லை. கீழே விழுந்து அடிபட்டுவிடும் என்று பயந்தனர். எனது அதீத ஆர்வத்தால் பெற்றோரும் குடும்பத்தினர் எதுவும் கூறவில்லை.

எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *