11 நாடுகள்… 36 லட்சம் ஊழியர்கள் – 58 இந்திய சூப்பர் ஹீரோக்கள்

11 நாடுகளில், 36 லட்சம் ஊழியர்களுக்கு 58 இந்திய வம்சாவளியினர் வேலைவாய்ப்பை கொடுத்து அசத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என 11 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 58 இந்திய வம்சாவளியினர் தலைமைப்பொறுப்கில் உள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் ( ரூ.75 லட்சம் கோடி) வருமானம் ஈட்டி சூப்பர் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் 36 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் சிலிகான் வேலியில் உள்ள தொழில் அதிபரும், இந்தியாஸ்போரா அமைப்பின் நிறுவனருமான ரங்கசாமி கூறுகையில், “இடம் பெயர்ந்த இந்தியர்கள் வர்த்தக உலகில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். வங்கி, மின்னணுவியல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதித்து வருகின்றனர். 37 வயது முதல் ல் 74 வயது வரையிலான இந்தியர்கள் இந்தச் சாதனை பட்டியலில் உள்ளனர்” என குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அல்லல்பட்டு வரும் நேரத்தில் சாதனை படைத்து வரும் இந்தியவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். தங்கள் ஊழியர்களையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்பது முக்கிய அம்சம்.

இந்த சாதனை இந்திய வம்சாவளியினர் பட்டியலில் ஆப்டிவ் மற்றும் அவந்தோர் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றும் குப்தா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, வெர்டெக்ஸ் பார்மாசியூடிகல்ஸ் தலைமை செயல் அதிகாரி ரேஷ்மா கேவல்ரமானி என பட்டியல் நீள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *