ஐ.நா.வுக்கே ஐடியா சொல்லும் இந்திய பெண்

மோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி புதிய குழு உருவாக்கப்பட்டது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, “உலகின் முழு கவனமும் கரோனா வைரஸ் பக்கம் திரும்பியுள்ளது.

ஐ.நா.-ஆலோசனைக்-குழுவில்-அர்ச்சனா-சோரங்கின்-சக-உறுப்பினர்கள்
ஐ.நா.-ஆலோசனைக்-குழுவில்-அர்ச்சனா-சோரங்கின்-சக-உறுப்பினர்கள்

அதேநேரம் பருவநிலை மாற்ற சவால்களை மறந்துவிடக்கூடாது. இதுதொடர்பாக 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. அவர்கள் ஐ.நா. சபைக்கு ஆலோசனை வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்செயலாளரின் பரிந்துரையின்பேரில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா சோரங்கும் இடம்பெற்றுள்ளார்.
ஒடிசாவின் ரூர்கேலாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (டிஐஎஸ்எஸ்) நிறுவனத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.

ஐ.நா.வில் அர்ச்சனா சோரங் மற்றும் அவரது சகாக்கள்.
ஐ.நா.வில் அர்ச்சனா சோரங் மற்றும் அவரது சகாக்கள்.


தர்போது டிஐஎஸ்எஸ் அமைப்பின் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக செயல்படுகிறார். இதற்கு முன்பு தேசிய பழங்குடி ஆணைய ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்துள்ளார்.
ஐ.நா. சபையின் சர்வதேச குழுவில் இந்திய பெண் அர்ச்சனா சோரங் தேர்வு செய்யப்பட்டிருப்பது உலகளாவிய அளவில் இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *