பாகிஸ்தான் எல்லையில் தில்லு காட்டும் இந்திய பெண்கள்.. ரைபிள்ள சுட்டா சும்மா அதிருமில்ல…

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெண்கள் போர்க் களத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. போர் பதற்றம் நிறைந்த பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


மலை சூழ்ந்த பகுதியில் ராணுவ சீரூடை அணிந்த 3 பெண்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைதன்மையை ஊடகங்கள் செய்து செய்துள்ளன.


பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீரின் எல்லையோர ராணுவ நிலைகளில் இந்திய ராணுவ ரைபிள்வுமன் படைப்பிரிவை சேர்ந்த வீராங்கனைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அதிநவீன துப்பாக்கிகளுடன் அந்தப் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் நேரங்களில் தகுந்த பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

எல்லையில் தில்லும் காட்டும் இந்திய பெண்கள்.

அந்த ரைபிள்வுமன் படைப்பிரிவை சேர்ந்த வீராங்கனைகள்தான் வைரல் வீடியோவாக கம்பீரமாக சமூக வலைதளங்களில் வலம் வருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் குறுகிய கால பணியில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ராணுவத்தின் நிரந்தர பணிகளில் பெண்களை சேர்க்க தீர்ப்பளித்தது.

இதை ஏற்று பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இனிமேல் ராணுவத்தின் மூத்த தளபதிகளாகவும் பெண்கள் பதவியேற்க முடியும்.


இந்திய ராணுவத்தில் தற்போது 3.8 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர். விமானப்படையில் 13 சதவீதம் பேரும் கடற்படையில் 6 சதவீத பெண்களும் உள்ளனர். எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக சவால்கள் நிறைந்த போர்க்களத்திலேயே இந்திய பெண்கள் குதித்திருப்பதாக புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *