ஏடிஎம்யில் பணம் வரும்.. பானி பூரி வருமா?

பானி பூரி விநியோகம் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தை தயாரித்து இந்திய இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

உணவு ஏடிஎம் இயந்திரம்


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பணம் செலுத்தினால் உணவுப் பொருட்களை வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் பிரபலமாக உள்ளன. இந்த இயந்திரங்களில் தங்களுக்கு தேவையான உணவு பண்டங்களை பொதுமக்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்கின்றனர். சர்வரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. அவருக்கு டிப்ஸ் தர வேண்டிய அவசியமும் இல்லை.


ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் இல்லை. சில ஓட்டல்களில் அத்தகைய இயந்திரங்கள் இருந்தாலும் அவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும்.

இந்தியர் சாதனை


இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சொந்த முயற்சியில் பானி பூரி விநியோகம் செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தனது ஏடிஎம் இயந்திரம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை விளக்கி சமூக வலைதளத்தில் அவர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


இயந்திரத்தின் திரையில் உணவு பொருளின் பெயரை குறிப்பிட்டு அதற்கான பொத்தானை அழுத்த வேண்டும். உரிய பணம் செலுத்தியுடன் சுடச்சுட பானி பூரி வெளியே வருகிறது. இதே இயந்திர மாடலில் வேறு உணவு பண்டங்களையும் வாடிக்கையாளருக்கு சுடச்சுட வழங்க முடியுமாம்.

பானிபூரி ஏடிஎம்


இந்த வீடியோ இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கிய இளைஞர் எந்த மாநிலம், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது மொழி உச்சரிப்பின் அடிப்படையில் அவர் குஜராத் அல்லது ராஜஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.


இதுவரை ஏடிஎம்-ல் பணத்தை மட்டுமே எடுத்து வந்த இந்திய மக்களுக்கு, இனிமேல் பானி பூரியும் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் பூரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *