மத்திய பிரதேசம் இந்தூர் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் பராஸ் ராய்கர், வறுமை காரணமாக கடந்த 22-ம் தேதி தள்ளுவண்டியின் முட்டை விற்றுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் ரூ.100 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அந்த சிறுவன் லஞ்சம் கொடுக்க மறுக்கவே, மாநகராட்சி ஊழியர்கள் தள்ளுவண்டியை ஈவு இரக்கமின்றி கவிழ்த்தனர். சாலையில் முட்டைகள் விழுந்து தெறித்து சிதறின. சுமார் 8,000 ரூபாய் நாசமானது. தாங்க முடியாத வேதனையில் சிறுவன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச அரசு சார்பில் பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா திட்டத்தில் சிறுவனின் குடும்பத்துக்கு வீடு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறுவன் மற்றும் அவனுடன் பிறந்தவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என்றும் மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
வைல் வீடியாவால் சிறுவனுக்கு முட்டைக்கு மேல் நல்ல பலன் கிடைத்துள்ளது. நாட்டின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அதுதொடர்பான வீடியோவை ஷேர் பண்ணி கொண்டே இருங்க என்று நெட்டிசன்கள் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளனர்.