மின்சார பஸ்களை இயக்க உள்கட்டமைப்பு வசதிகள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.33,000 கோடி அளவில் நஷ்டத்தில் இயங்குகின்றன. ‘டீசல் விலையும் உயர்ந்து வருவதால் நஷ்டம் அதிகரிக்கிறது.
டீசல் விலை உயர்வினால் மின்சார பஸ்களை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை இயக்குவதற்காக தமிழகம் முழுவதும் பேட்டரி சார்ஜிங் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை 6 மாதங்களில் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *